சட்டவிளக்கு - Satta Vilakku
ஓர்  அரசு  இப்படி இருக்கவேண்டும்!
தொகுதி 1, இதழ் 11முழு இதழ் (இலவசம்)

ஓர் அரசு இப்படி இருக்கவேண்டும்!

வெளியிடப்பட்ட நாள்: 25 ஜூலை, 2026

விளக்கம் (Description)

இந்த இதழுக்கான சிறப்பு விளக்கம் ஏதுமில்லை.

இதழ் உள்ளடக்கம் (Table of Contents)

சட்ட அறிவுதான் சமூகத்தை உயர்த்தும்!

ஆசிரியர் குழுeditorial

அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அதிரடி கைது! காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை!

ஆசிரியர் குழுarticle

வங்கி லாக்கர் பாதுகாப்பானதுதானா? நகைகள் திருடுபோனால் முழு இழப்பீடு கிடைக்குமா?

ஆசிரியர் குழுarticle

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. அமல்ராஜ் IPS அவர்களைச் சந்தித்த "சட்டவிளக்கு" இதழ் சிறப்பாசிரியர் எம்.பி. உதயசூரியன் - ஆசிரியர் கே. இளையராஜா!

சட்டவிளக்கு இதழ்article

பணி மறு நியமன நிராகரிப்பு: ஆசிரியர் மாரிமுத்துவின் புகார் மற்றும் அமைச்சர் ராஜமோகனின் உடனடி நடவடிக்கை!

தி. மாரிமுத்து (ஓமா வாசுகி)story

வாரிசு சான்றிதழ் பெற கால வரம்பு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ஆசிரியர் குழுarticle

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? - சில சட்ட விளக்கங்கள்

ஆசிரியர் குழுarticle

இல்லத்தரசிகளின் பணிகளுக்கும் இனி பொருளாதார மதிப்பு உண்டு!

ஆசிரியர் குழுarticle

தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மாமனிதர் காமராஜர்

ஆசிரியர் குழுarticle

வாசகர் கேட்கிறார் - வழக்கறிஞர் பதிலளிக்கிறார் (உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்கள்)

அட்வகேட் K. இளையராஜா, M.Sc., LL.B.article

திட்டமிடுங்கள்... சேமியுங்கள்... முன்னேறுங்கள்! (சொல்லி அடித்தால் நீங்களும் மில்லியனரே! செல்வம் கொழிக்கும் சிக்ரெட் தொடர்!)

ஆசிரியர் குழுarticle

அதிக சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியுமா? கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மைல்கல் தீர்ப்பு!

ஆசிரியர் குழுarticle

ஜீவனாம்சம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு

ஆசிரியர் குழுarticle

உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்கள்

அட்வகேட் R. இளையராஜா, M.Sc., LL.B.article

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை மாற்ற முடியாதா?

அட்வகேட் R. இளையராஜா, M.Sc., LL.B.article

கியூம்பா பென்சில்

ஆசிரியர் குழுstory

சட்ட அறிவுதான் சமூகத்தை உயர்த்தும்!

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

தலையங்கம்சட்ட அறிவுதான் சமூகத்தை உயர்த்தும்!ஜூலை மாதம் தமிழர்களின் தலை எழுத்தை மாற்றிய மகத்தான மாதமாகும். காரணம், கல்வி புரட்சியின் நாயகனும், எளிமையின் சின்னமுமான பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. "ஏழை எளிய வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்! அவர்கள் பசியார சோறு போட வேண்டும்" என்ற தாயுள்ளத்தோடு அவர் கொண்டு வந்தததுதான் "மதிய உணவுத் திட்டம்!". அவரது கனவே இன்று நனவாகி, தமிழகத்தின் மகத்தான கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இன்றைய டிஜிட்டல் உலகில் கல்வியுடன் சட்ட விழிப்புணர்வும் அவசியமாகியுள்ளது. இணைய மோசடிகள், சமூக ஊடக குற்றங்கள், போதைப் பொருள் பழக்கம் போன்ற சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். காமராஜரின் நேர்மை, எளிமை, பொதுச்சேவை ஆகிய பண்புகளைப் பின்பற்றுவதோடு, சட்ட அறிவையும் வளர்த்துக் கொள்வதே சிறந்த சமூகத்தை உருவாக்கும். அடிப்படை உரிமைகளை அறிந்த குடிமகனாகவும், கடமைகளை உணர்ந்த முழு மனிதனாகவும் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். "கல்வி மனிதனை உயர்த்தும்; சட்ட அறிவு சமூகத்தை உயர்த்தும்" என்ற எண்ணத்துடன் நடைபோடத் தயாராவோம்! - ஆசிரியர்

அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அதிரடி கைது! காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை!

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

"பாதுகாப்பான சாலைகள், பாதுகாப்பான உயிர்கள்” என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதில் சென்னை பெருநகர காவல்துறை எப்போதும் உறுதியாகச் செயல்படும்!” அழுத்தமாக உறுதி அளித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ்!சென்னை போக்குவரத்து காவல்துறையினருடன், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இணைந்து, சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்காக 300 கார்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அதிரடி கைது! காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை!இந்நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னையில் சாலைப் பாதுகாப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இது போன்ற பல் வேறு சமூகநலப் பணிகளை மேற்கொண்டும் வருகிறோம்.சென்னையில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பைக் ரேஸில் ஈடுபட்ட 17 வயது இளைஞர்கள் உட்பட தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அவர்கள் சொந்த உயிருக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவே இது போன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.பிறரை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, சிறுவர்களுக்கு வாகனம் ஓட்டக் கொடுத்தால் பெற்றோர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் மீதும் அதே நடவடிக்கை பாயும்” என்றார்.

வங்கி லாக்கர் பாதுகாப்பானதுதானா? நகைகள் திருடுபோனால் முழு இழப்பீடு கிடைக்குமா?

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

வங்கி லாக்கர் பாதுகாப்பானதுதானா? நகைகள் திருடுபோனால் முழு இழப்பீடு கிடைக்குமா? - ஆர்பிஐ விதிகள் என்ன சொல்கின்றன? சட்ட விழிப்புணர்வு சிறப்புக்கட்டுரை.பொதுவாக தங்க நகைகள், வைர நகைகள், சொத்து ஆவணங்கள், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மக்கள் வங்கி லாக்கர்களை பயன்படுத்துகின்றனர். "வங்கி லாக்கரில் வைத்துவிட்டோம், இனி முழு பாதுகாப்பு" என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. ஆனால் உண்மையில் வங்கி லாக்கர் முழுமையான பாதுகாப்பை வழங்குகிறதா? லாக்கரில் உள்ள பொருட்கள் திருடப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ வங்கி அதன் முழு மதிப்பையும் வழங்குமா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகள் என்ன கூறுகின்றன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.வங்கி லாக்கருக்கு வங்கியின் பொறுப்பு எவ்வளவு?வங்கி லாக்கர் என்பது வாடிக்கையாளரின் மதிப்புமிக்க பொருட்களை வைப்பதற்காக வங்கியால் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பு வசதி மட்டுமே. லாக்கருக்குள் என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது பொதுவாக வங்கிக்குத் தெரியாது. இதன் காரணமாக லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பு அல்லது தன்மை குறித்து வங்கி நேரடியாகப் பொறுப்பேற்காது. ஆனால் வங்கியின் அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு, ஊழியர்களின் தவறு, கொள்ளை அல்லது மோசடி போன்ற காரணங்களால் இழப்பு ஏற்பட்டால் வங்கிக்குப் பொறுப்பு ஏற்படும். இருப்பினும் அந்தப் பொறுப்பு வரம்பற்றதல்ல.ஆர்பிஐ விதிகளின்படி இழப்பீடு எவ்வளவு?ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, வங்கியின் தவறால் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளர் செலுத்தும் வருடாந்திர லாக்கர் வாடகை கட்டணத்தின் 100 மடங்கு வரை மட்டுமே வங்கி இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஆண்டுக்கு ரூ.2,000 லாக்கர் வாடகை செலுத்தினால், இழப்பு ஏற்பட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே இழப்பீடு பெற முடியும். ஆனால் லாக்கரில் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நகைகள் இருந்தாலும், அவற்றின் முழு மதிப்பையும் வங்கி வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை.இயற்கை பேரிடர்களுக்கு வங்கி பொறுப்பா?பூகம்பம், வெள்ளம், புயல், மின்னல், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களால் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால், அந்த இழப்புக்கு வங்கியைப் பொறுப்பாக்குவது எளிதல்ல. எனவே லாக்கர் வசதி இருந்தாலும் அது முழுமையான நிதி பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதே நிதர்சனம்.தனி காப்பீடு ஏன் அவசியம்?இன்றைய சூழலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்திருப்பவர்கள், கூடுதலாக தனி காப்பீட்டுப் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகியுள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் Bank Locker Insurance Policies மூலம் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகள் மட்டுமல்லாமல் முக்கிய ஆவணங்களுக்கும் பாதுகாப்பு பெற முடியும். இந்தக் காப்பீட்டுக் கொள்கை, தீ விபத்து, இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்குகிறது.காப்பீடு வழங்கும் நிறுவனங்கள்இந்தியாவில் பல பொதுத்துறை மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாக்கர் பாதுகாப்பு தொடர்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை:* IFFCO Tokio General Insurance* Chola MS General Insurance* HDFC ERGO General Insuranceபாலிசியின் வகை மற்றும் பாதுகாப்பு வரம்பைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும்.காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை* வங்கிகள் பெரும்பாலும் லாக்கர் பொருட்களுக்கு தனியாக காப்பீடு வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* லாக்கரில் உள்ள பொருட்களின் மதிப்பை சரியாக கணக்கிட்டு அதற்கேற்ற காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும்.* அதிக மதிப்புள்ள நகைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளரின் (Approved Valuer) சான்றிதழ் தேவைப்படலாம்.* பொருட்களின் ரசீதுகள், புகைப்படங்கள் மற்றும் மதிப்பீட்டு சான்றுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.* காப்பீட்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகள், பாதுகாப்பு வரம்புகள் மற்றும் உரிமைக்கோரல் (Claim) நடைமுறைகளை முழுமையாக படித்து அறிந்துகொள்ள வேண்டும்.சட்ட ரீதியாக பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டியதுவங்கி லாக்கர் என்பது பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய வசதி என்றாலும், அது முழுமையான நிதி பாதுகாப்பு அல்ல. வங்கியின் பொறுப்பு வரம்புடையது. எனவே லாக்கரில் அதிக மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை வைத்திருப்பவர்கள், கூடுதலாக காப்பீட்டுப் பாதுகாப்பு பெறுவது புத்திசாலித்தனமான முடிவாகும். "வங்கி லாக்கர் பாதுகாப்பை வழங்கலாம்; ஆனால் முழுமையான நிதி பாதுகாப்பை உறுதி செய்வது காப்பீடே” என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.---சட்டவிளக்கு கருத்து:சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றுக்கான சட்ட மற்றும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்வதே இன்றைய காலத்தின் அவசியமாகும். வங்கி லாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தனது உரிமைகள், வங்கியின் பொறுப்பு வரம்பு மற்றும் காப்பீட்டு வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்திருப்பது எதிர்கால இழப்புகளைத் தவிர்க்க உதவும்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. அமல்ராஜ் IPS அவர்களைச் சந்தித்த "சட்டவிளக்கு" இதழ் சிறப்பாசிரியர் எம்.பி. உதயசூரியன் - ஆசிரியர் கே. இளையராஜா!

சட்டவிளக்கு இதழ்5 நிமிடம் வாசிப்பு

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. அமல்ராஜ் IPS அவர்களை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் "சட்டவிளக்கு" இதழ் சிறப்பாசிரியர் எம். பி. உதயசூரியன் - ஆசிரியர் கே. இளையராஜா!

பணி மறு நியமன நிராகரிப்பு: ஆசிரியர் மாரிமுத்துவின் புகார் மற்றும் அமைச்சர் ராஜமோகனின் உடனடி நடவடிக்கை!

தி. மாரிமுத்து (ஓமா வாசுகி)5 நிமிடம் வாசிப்பு

முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆட்சியின் முன்னுதாரண அமைச்சராகத் திகழும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறது "சட்டவிளக்கு" மாத இதழ்!ஆசிரியர் மாரிமுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த புகார் இது!மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களுக்கு வணக்கம். என் பெயர் தி. மாரிமுத்து. ஓமா வாசுகி எனும் பெயரில் எழுதி வருகிறேன். கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் ஐந்தாண்டு பட்டயப் படிப்பாக ஓவியம் பயின்றேன். மொழிபெயர்ப்புக்காகவும் சிறந்த இலக்கியத்திற்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதும் ஐந்து முறை தமிழ்நாடு அரசு விருதும் பெற்றிருக்கிறேன். மூன்று சிறந்த பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக பத்திரிகை பதிப்பகம் சார்ந்து செயல்பட்டு வருகிறேன். சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, செண்டங்காடு (பட்டிக்கோட்டை வட்டம்) அரசு உயர்நிலைப்பள்ளியில் 25/11/2019 அன்று ஓவிய ஆசிரியராக (சிறப்பாசிரியராக) பணியில் இணைந்தேன். 30/06/26ல் எனக்கு பணி ஓய்வு. ஆயினும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால் அடுத்த கல்வியாண்டுவரை (பத்து மாதங்கள்) பணியாற்றலாம் என்பது அரசு விதி. எனவே, 05/06/26 அன்று மறு நியமனத்திற்காக, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். தஞ்சை CEO விடுப்பில் இருக்கிறார். எனவே திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியா தஞ்சைக்கு பொறுப்பு CEO ஆக இருக்கிறார். இதில் இணைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை நேற்று திருமதி சுகப்பிரியா என் பள்ளி மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து, பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்திடக் கோரினார். நான் அவகாசம் கேட்டு பள்ளியிலிருந்து வெளியேறினேன்.பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார். மறு நியமனம் என்பது என் போன்ற அரசுப் பள்ளி கலை ஆசிரியர்களின் உரிமை. இதை திருமதி சுகப்பிரியா துச்சமாகப் புறக்கணிக்கிறார். நான் நூலகப் பாடவேளையையும் ஓவியப் பாடவேளையையும் சேர்த்துத்தான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பார்த்து வருகிறேன். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 81. நான் இதுகுறித்து சென்னையில் உள்ள கல்வித்துறை சார்ந்த அதிகாரியிடம் பேசினேன். அவரும் அவரது உயர் அதிகாரியும் திருமதி சுகப்பிரியாவிடம், “இதை நீங்கள் மறுக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கான மறு நியமனம் என்பது அரசு நடைமுறைதான்” என்று மிகவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். ஆனால் திருமதி திருவாரூர் CEO சுகப்பிரியா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். “நான் எந்த சிறப்பாசிரியருக்கும் மறு நியமனம் கொடுக்கவில்லை. செண்டங்காடு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஓவிய ஆசிரியர் பற்றி கருத்து கேட்டுவிட்டுத்தான் முடிவெடுத்தேன்” என்று திருமதி சுகப்பிரியா சொல்லியிருக்கிறார்.ஒன்று, கலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மறு நியமனம் என்பது மிக எளித நடைமுறை. இதை திருமதி சுகப்பிரியா அதிக்காரமாக மறுக்கிறார். இரண்டு, பள்ளியில் என் செயல்பாடு சரியில்லை என்றது என் மீது சுமத்தப்படும் மிகப்பெரிய பழிச்சொல். திருமதி சுகப்பிரியா எனக்கு இழைத்த கொடும் அவமானம். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். எவர் வேண்டுமானாலும் என் பள்ளியின் ஒவ்வொரு மாணவரிடத்திலும் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தலைமை ஆசிரியரிடம்,” பள்ளியில் என் செயல்பாடுகள் சரியில்லை என்று திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியாவிடம் சொன்னீர்களா?” என்று கேட்டேன். நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. என் போனை வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளலாம்” என்று அவர் சொன்னார். இத்தனைக்கும் தலைமை ஆசிரியரும் நானும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மறு நியமனத்திற்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்ததே அவர்தானே! அப்படிஎன்றால் திருமதி சுகப்பிரியா பொய் சொல்கிறாரா? கல்வித்துறை அதிகாரி, மறு நியமனம் கோரியும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும் திருமதி சுகப்பிரியா மீது வழக்குத் தொடுங்கள் என்று ஆலோசனை சொன்னார். வழக்கு நடத்தும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. நான் மொத்தம் ஆறு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் மட்டுமே பள்ளியில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கான மறு நியமனத்தை திருமதி சுகப்பிரியா மறுப்பது முறைகேடு. நான் பிழைப்புக்காக இதைக் கேட்கவில்லை. என் உரிமை அபகரிக்கப்படுவது, சர்வாதிகாரமாக உதாசீனப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. ஓவிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, கலை ஆசிரியர்கள் மீதான திருமதி சுகப்பிரியாவின் அலட்சியத்தையே காட்டுகிறது. ஓவிய, நூலக ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்றால் காலங்காலமாக அரசுப் பள்ளிகளில் ஏன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் மெளனமாக இருந்தால், எனக்குப் பின் ஓய்வு பெறும் கலை ஆசிரியர்களும் மறு நியமனத்திற்கு தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் அச்சமும் ஏற்படுகிறது. எனவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள், திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியா எனக்கு அளித்த மறு நியமன நிராகரிப்பு ஆணையை ரத்து செய்து எனக்கு அடுத்த கல்வியாண்டுவரை பணிபுரிய உத்தரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவண் - தி. மாரிமுத்து (ஓமா வாசுகி)பணியில் இணைந்தேன்!காலையில் எனக்கு மறு நியமனம் மறுக்கப்படுவது குறித்து பதிவிட்டிருந்தேன். நிறைய நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் (Raj Mohan) அவர்களின் உத்தரவின்படி இன்று மாலை பணியில் இணைந்தேன். அமைச்சர் அவர்களுக்கும் என் வேண்டுகோளைப் பகிர்ந்து உதவிய அத்தனை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான நன்றி என்பதை இந்த ஒரு வார்த்தையால் குறுக்கிவிட முடியாது என்று எனக்குத் தெரியும். ஆயினும் என் வெகு வியாபகமிக்க நெகிழ்ந்த நன்றியை இச்சொல்லாலேயே சமர்ப்பித்துக்கொள்கிறேன். -- தி. மாரிமுத்து

வாரிசு சான்றிதழ் பெற கால வரம்பு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்கள், வேலை அல்லது இதர அரசு சலுகைகளைப் பெறுவதற்கு ‘சட்டபூர்வ வாரிசு சான்றிதழ்’ (Legal Heir Certificate) மிக அவசியமான ஒன்றாகும். பல நேரங்களில், பொதுமக்கள் இந்த சான்றிதழைப் பெற பல ஆண்டுகள் தாமதமாக விண்ணப்பிக்கும்போது, “ரொம்ப வருஷம் ஆகிடுச்சு, இனிமேல் தர முடியாது; கோர்ட்டுக்கு போங்க” என்று சொல்லி வட்டாட்சியர்கள் (தாசில்தார்) விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், “வாரிசு சான்றிதழ் பெற எந்தவித காலவரம்பும் இல்லை; தாமதத்தைக் காரணம் காட்டி அரசு அதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து தப்பிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த வழக்கின் பின்னணியையும், உங்களுக்கான சட்ட உரிமைகளையும் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.வழக்கின் பின்னணி என்ன?கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரது தந்தை கடந்த 14.11.1979 அன்று காலமானார். குடும்பச் சூழ்நிலை காரணமாக, தந்தை இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, மனுதாரர் தனது தந்தையின் வாரிசு சான்றிதழ் கோரி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். ஆனால், விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டிய தாசில்தார், “தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு தாமதமாக வந்த விண்ணப்பத்தை ஏற்க முடியாது” என்று கூறி அதனை அதிரடியாக நிராகரித்தார். இதனால் பாதிக்கப்பட்ட மனுதாரர், தனக்கு நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் (W.P.(MD) No.16233 of 2014).உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவுகள்தி இந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் டி.எஸ். சிவஞானம் அவர்கள், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பொதுமக்களுக்கு ஆதரவாகப் பின்வரும் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்:1. வாரிசு சான்றிதழுக்கு கால வரம்பு கிடையாதுவாரிசு சான்றிதழ் கோரி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பித்தாலும், “காலதாமதம் ஆகிவிட்டது” என்ற ஒரே காரணத்திற்காக அதை நிராகரிக்க வட்டாட்சியருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டம் அதற்கு இடம் தரவில்லை.2. அரசு சுற்றறிக்கையை (G.O.) கட்டாயம் பின்பற்ற வேண்டும்தமிழக அரசின் சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்ட அரசு கடித எண்: Letter (நிலை) No.4534, நாள்: 28.11.1991-இன் படி, ஒரு விண்ணப்பம் வந்தால் அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விதிகள் உள்ளன. கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) ஆகியோரைக் கொண்டு கள விசாரணையை நடத்த வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உண்மையான வாரிசுகள் யார் என்பதைக் கண்டறிந்து வட்டாட்சியரே சான்றிதழ் வழங்க வேண்டும். இதை அனைத்து தாசில்தார்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.3. பொதுமக்களை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கக் கூடாது!விண்ணப்பம் தாமதமாக இருக்கிறது என்பதற்காக, “நாங்கள் தர முடியாது, நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று உத்தரவு வாங்கி வாருங்கள்” என்று பொதுமக்களுக்குப் பணிச்சுமையையும், அலைச்சலையும் தருவது சட்டப்படி தவறு. உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டியது வருவாய்த்துறையின் கடமையாகும்.நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு:தாசில்தார் பிறப்பித்த நிராகரிப்பு உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மனுதாரரிடம் இருந்து புதிய விண்ணப்பம், இறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை (Ration Card) அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு, அதிகபட்சம் 4 முதல் 8 வாரங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இத்தீர்ப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?உங்கள் குடும்பத்தில் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது இறந்து, அதற்கு இப்போது வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மறுப்புக்கு முற்றுப்புள்ளி! தாசில்தார் “நேரம் கடந்துவிட்டது” என்

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? - சில சட்ட விளக்கங்கள்

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) ஆகியோரைக் கொண்டு கள விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உண்மையான வாரிசுகள் யார் என்பதை கண்டறிந்து வட்டாட்சியரே சான்றிதழ் வழங்க வேண்டும். இதை அனைத்து தாசில்தார்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 3. பொதுமக்களை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கக் கூடாது! விண்ணப்பம் தாமதமாக இருக்கிறது என்பதற்காக, “நாங்கள் தர முடியாது, நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள்” என்று பொதுமக்களுக்குப் பணிச்சுமையையும், அலைச்சலையும் தருவது சட்டப்படி தவறு. உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டியது வருவாய்த்துறையின் கடமையாகும். நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு: தாசில்தார் பிறப்பித்த நிராகரிப்பு உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மனுதாரரிடம் இருந்து புதிய விண்ணப்பம், இறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை (Ration Card) அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு, அதிகபட்சம் 4 முதல் 8 வாரங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? உங்கள் குடும்பத்தில் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது இறந்து, அதற்கு இப்போது வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். அதிகாரிகளின் மறுப்புக்கு முற்றுப்புள்ளி! தாசில்தார் “நேரம் கடந்துவிட்டது” என்று சொன்னால், நீங்கள் இந்த மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி உங்களது உரிமையைக் கோரலாம். விரைவான தீர்வு: மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) தங்களின் கீழ் உள்ள அனைத்து தாசில்தார்களுக்கும இதை குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இனி இத்தகைய விண்ணப்பங்கள் தாமதமின்றி பரிசீலிக்கப்படும். சட்டக் குறிப்பு: சட்டம் என்பது பொதுமக்களுக்கு உதவவே தவிர, அவர்களை அலைக்கழிக்க அல்ல என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. உங்களுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்படும் பட்சத்தில், தேவையான ஆவணங்களுடன் தகுந்த முறையில் விண்ணப்பித்து உங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

இல்லத்தரசிகளின் பணிகளுக்கும் இனி பொருளாதார மதிப்பு உண்டு!

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் பெண்களின் மறைக்கப்பட்ட உழைப்பை அங்கீகரித்த உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு! இந்திய சமூக அமைப்பில் குடும்பம் என்பது ஒரு சிறிய நிர்வாக அமைப்பாகக் கருதப்படுகிறது. அந்த அமைப்பின் மையமாகச் செயல்படுபவர் பெரும்பாலும் இல்லத்தரசி. அதிகாலையில் தொடங்கி இரவு வரை குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைக் கவனித்தல், சமையல் செய்தல், குழந்தைகளை வளர்த்தல், முதியோர்களைப் பராமரித்தல், குடும்ப நிதி நிர்வாகம், வீட்டு சுத்தம் மற்றும் ஒழுங்கு போன்ற எண்ணற்ற பொறுப்புகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் இவ்வளவு முக்கியமான பணிகளுக்காக அவர்கள் சம்பளம் பெறுவதில்லை. இதனால் பல ஆண்டுகளாக இல்லத்தரசிகளின் உழைப்பு பொருளாதார மதிப்பற்றதாக சமூகத்தில் கருதப்பட்டு வந்தது. “வீட்டில்தான் இருக்கிறார்; வேலை எதுவும் செய்வதில்லை” என்ற தவறான பார்வையும் நிலவியது. இந்த நிலையை மாற்றும் வகையில், மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் தனித்த பொருளாதார மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண்களின் உழைப்பிற்கான சட்ட அங்கீகாரமாகவும் சமூக நீதிக்கான மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசி - சம்பளமில்லா முழுநேரப் பணியாளர்! ஒரு இல்லத்தரசி தினமும் செய்யும் பணிகளை தனித்தனியாக மதிப்பிட்டுப் பார்த்தால், அவர் ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களை மேற்கொள்கிறார் என்பதை உணர முடியும். ஒரு இல்லத்தரசி... * சமையல்காரர் * குழந்தை பராமரிப்பாளர் * குடும்ப ஆலோசகர் * செவிலியர் * ஆசிரியர் * கணக்காளர் * வீட்டு நிர்வாகி எனப் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகிக்கிறார். இந்தப் பணிகளுக்காக தனித்தனியாக நபர்களை நியமித்தால், மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவாகும். ஆனால் குடும்ப அன்பு மற்றும் பொறுப்புணர்வின் காரணமாக இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் இந்த உழைப்பு பெரும்பாலும் கணக்கிடப்படாத பொருளாதார பங்களிப்பாகவே இருந்து வருகிறது. மோட்டார் விபத்து வழக்குகளில் ஏற்பட்ட சிக்கல்! மோட்டார் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அல்லது நிரந்தர ஊனமுற்றால், அவருடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. சம்பளம் பெறும் நபர்களின் வருமானத்தை கணக்கிடுவது எளிது. சம்பளச் சான்று, வருமான வரி கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வருமானத்தை நிரூபிக்க முடியும். ஆனால் இல்லத்தரசிகளின் நிலை வேறுபட்டது. அவர்களுக்கு சம்பளச் சான்றோ, வருமான வரி ஆவணமோ இருப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் அவர்களின் குடும்பங்களுக்குக் குறைந்த அளவிலான இழப்பீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனை நீதித்துறை காலப்போக்கில் கவனித்து, இல்லத்தரசிகளின் குடும்பப் பங்களிப்பை பொருளாதார அடிப்படையில் மதிப்பிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தின் முக்கிய நிலைப்பாடு! சமீபத்திய தீர்ப்பில், இல்லத்தரசிகள் குடும்பத்திற்கு வழங்கும் சேவைகள் அளவிட முடியாத மதிப்புடையவை என்றும், அவை பொருளாதார ரீதியாகவும் கணக்கிடப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஒரு இல்லத்தரசி சாலை விபத்தில் உயிரிழக்கும்போது குடும்பம் இழப்பது ஒரு நபரை மட்டுமல்ல; குடும்பத்தின் முழுமையான நிர்வாகத்தையும், பராமரிப்பு அமைப்பையும் இழக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் அடிப்படையில், வழக்கின் சூழ்நிலைகளைப் பொறுத்து இல்லத்தரசியின் குடும்பப் பங்களிப்பை மாதத்திற்கு ரூ.30,000 வரை மதிப்பிட்டு இழப்பீடு கணக்கிடலாம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறை எதிர்கால மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் முக்கிய முன்னுதாரணமாக அமையும். உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள்! இல்லத்தரசிகளின் பணியை அங்கீகரிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. லதா வாத்வா வழக்கு: இந்த வழக்கில், இல்லத்தரசிகளின் சேவைகளை வெறும் குடும்பப் பொறுப்பாக மட்டும் கருத முடியாது என்றும், அதற்கு பொருளாதார மதிப்பு உண்டு என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. அருண்குமார் அகர்வால் வழக்கு: இந்தத் தீர்ப்பில், இல்லத்தரசிகள் குடும்பத்திற்கு வழங்கும் சேவைகள் நாட்டின் பொருளாதார அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும், அவர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் கூறப்பட்டது. கீர்த்தி வழக்கு: 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், இல்லத்தரசியின் வருமானத்தைப் பூஜ்ஜியம் என்று கருதுவது சட்ட நீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. சட்ட நீதியாக இதன் முக்கியத்துவம்! மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு மனுக்களில் “Just Compensation” எனப் படும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை கொள்கையாகும். நியாயமான இழப்பீடு என்பது வெறும் சம்பள இழப்பை மட்டும் கணக்கிடுவதல்ல. குடும்பத்திற்கு ஏற்பட்ட உண்மையான பொருளாதார மற்றும் சமூக இழப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இல்லத்தரசிகளின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம்: * இல்லத்தரசிகளின் உழைப்பின் மதிப்பு குறித்து சமூக விழிப்புணர்வு அதிகரிக்கும். * பெண்களின் பங்களிப்பு பொருளாதார ரீதியாக அங்கீகரிக்கப்படும். * மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கும். * காப்பீட்டு நிறுவனங்கள் இல்லத்தரசிகளின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. * பாலின சமத்துவம் குறித்த நீதித்துறையின் முன்னோற்றமான அணுகுமுறை வலுப்பெறும். ஒரு குடும்பத்தின் வெற்றி மற்றும் நிலைத்தன்மையின் பின்னால் பெரும்பாலும் ஒரு இல்லத்தரசியின் அமைதியான உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்புக்கு சம்பளம் இல்லாததால் அது மதிப்பற்றதாகிவிடாது. மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் இல்லத்தரசிகளின் பணிக்கு பொருளாதார மதிப்பு உண்டு என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருப்பது, பெண்களின் கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன்னேற்றமாகும். “இல்லத்தரசி குடும்பத்தின் இதயம் மட்டுமல்ல; குடும்பத்தின் மறைக்கப்பட்ட பொருளாதார சக்தியும் ஆவார்” என்பதை இந்திய நீதித்துறை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. சட்டவிளக்கு கருத்து: சம்பளம் பெறாத உழைப்பு மதிப்பற்றதல்ல. குடும்பத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் இல்லத்தரசிகளின் பங்களிப்பை சட்டம் இன்று அங்கீகரித்து வருகிறது. பெண்களின் உழைப்புக்கும் உரிய மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற சமூக மாற்றத்திற்கு இந்தத் தீர்ப்பு ஒரு வலுவான அடித்தளமாக அமையும். எதிர்கால மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகளில் இது முக்கிய வழிகாட்டி தீர்ப்பாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மாமனிதர் காமராஜர்

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

“ஒரு நாட்டின் செல்வம் அதன் பொக்கிஷங்களில் இல்லை; அதன் மக்களின் அறிவில்தான் உள்ளது” என்ற உண்மையை நடைமுறையில் நிரூபித்த தலைவர்தான் பெருந்தலைவர் காமராஜர். இன்று தமிழகம் இந்தியாவின் முன்னணி கல்வி மாநிலமாக திகழ்வதற்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் காமராஜர். கல்வி என்பது வசதி படைத்தவர்களின் உரிமை மட்டுமல்ல; ஏழை, எளிய, கிராமப்புறக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை காலத்திற்கு முன்பே உணர்ந்து செயல்பட்ட தொலைநோக்கு பார்வை உடைய அரசியல்வாதி அவர். அவரது பிறந்த நாளான ஜூலை 15 தமிழகத்தில் “கல்வி வளர்ச்சி நாள்” ஆகக் கொண்டாடப்படுவது வெறும் நினைவ...சலிப்பு அல்ல; கல்வி வழியே சமூக மாற்றத்தை உருவாக்கிய மகத்தான தலைவருக்குச் செலுத்தப்படும் நன்றிக்கடனாகும். குலக்கல்வித் திட்டத்திலிருந்து கல்விப் புரட்சிவரை 1953 ஆம் ஆண்டு ஏழைத்தலைமுறைக்கு எழுத்துப்பறிவித்த பெருந்தலைவர் காமராஜர்! அறிமுகப்படுத்தப்பட்ட குலக்கல்வித் திட்டம், குழந்தைகள் தங்கள் குடும்பத் தொழிலைத் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. இதனால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது. 1954 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர், மக்கள் எதிர்ப்பை மதித்து அத்திட்டத்தை உடனடியாகக் கைவிட்டார். அதன்பின்னர் கல்வியை மக்களிடம் கொண்டு செல்லும் வரலாற்றுச் செயல்பாடுகளைத் தொடங்கினார். பள்ளிகள் மக்களைத் தேடிச் சென்றன காமராஜரின் ஆட்சிக்காலத்தில், மூடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. புதிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. “ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி” என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. 300 மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் ஒரு மைல் சுற்றளவிற்குள் ஆரம்பப் பள்ளியும், 500 மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் நடுநிலைப் பள்ளியும் அமைக்கப்பட்டன. இதன் விளைவாகப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதன்முதலாக கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். கல்விக்கான சட்டப்பூர்வ மற்றும் நிதி அடித்தளம் கல்வி வளர்ச்சி வெறும் கட்டிடங்கள் கட்டுவதால் மட்டுமே சாத்தியமில்லை என்பதை உணர்ந்த காமராஜர், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ஏற்படுத்தினார். மாநில வருவாயில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகை கல்விக்காக ஒதுக்கப்பட்டது. அக்கால இந்தியாவில் இது மிகப்பெரிய முதலீடாகக் கருதப்பட்டது. கல்விக்கான அரசு செலவினம் உயர்த்தப்பட்டதன் மூலம்: * பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. * ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். * பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் கல்விப் பரவலுக்கு வலுவான நிர்வாக மற்றும் சட்ட அடித்தளமாக அமைந்தன. இலவசக் கட்டாயக் கல்வி: அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெறும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 45-ன் படி: “14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலட்சியத்தை இந்தியாவில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தியவர் காமராஜர். பள்ளி கட்டணங்கள் நீக்கப்பட்டும், உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி விரிவுபடுத்தப்பட்டதும். இதன் மூலம், வறுமையால் பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்கள் மீண்டும் கல்வியில் இணைந்தனர். பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை அதிகரித்தது. கல்வி சமூக உரிமையாக மாற்றப்பட்டது. “ஏழைக் குழந்தைகள் படிக்க வேண்டும்; படித்தால்தான் தங்களது உரிமைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும்“ என்று சொன்ன காமராஜர், “பசியுடன் இருக்கும் குழந்தையிடம் பாடம் சொல்ல முடியாது” என்ற உண்மையை உணர்ந்ததால், 1956 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்: பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல். இடைநிற்றலைக் குறைத்தல். குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல். அதுமட்டுமின்றி, சாதி மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதால் பள்ளிகள் சமூக சமத்துவத்தின் மையங்களாக மாறின. இத்திட்டமே பின்னாளில்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமாகவும், இன்று நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின் முன்னோடி காமராஜர்! 2002 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 86-வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21A சேர்க்கப்பட்டது. அதன்படி: 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act, 2009) இயற்றப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் வலியுறுத்தும் பல அம்சங்கள் காமராஜரின் ஆட்சிக்காலத்திலேயே தமிழகத்தில் நடைமுறையில் இருந்தன. * அனைவருக்கும் கல்வி வாய்ப்பு. * பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு. * ஆசிரியர் நியமனம் மற்றும் ஊதிய நிர்ணயித்தல். * பள்ளி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பு. * பள்ளிச் சேர்க்கை மற்றும் தொடர்ச்சியான வருகை உறுதி. எனவே, நவீன கல்வி உரிமைச் சட்டத்தின் சிந்தனைகளுக்கு முன்னோடியாக காமராஜரின் கல்விக்கொள்கைகள் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. கல்வி மூலம் சமூக மாற்றம் காமராஜரின் கல்விப் புரட்சி வெறும் கல்வி வளர்ச்சியை மட்டும் உருவாக்கவில்லை. அது: வறுமையை எதிர்த்தது. குழந்தை தொழிலாளர் முறையைக் குறைத்தது. பெண்கள் கல்வியை ஊக்குவித்தது. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தியது. இன்றைய தமிழ்ப்நாட்டின் உயர்ந்த கல்வியறிவு விகிதம், அறிவியலில் முன்னேற்றம், நிர்வாகத் திறன் ஆகியவற்றுன் பின்னணியில் காமராஜரின் கல்விக்கொள்கைகள் வலுவாக நிற்கின்றன. பெருந்தலைவர் காமராஜர் சட்டக் கல்லூரிகளில் கல்வி கற்கவில்லை; ஆனால் மக்களின் வாழ்க்கைப் பல்கலக்கழகத்தில் கற்றுத் தேர்ந்தவர். அவர் இயற்றிய கல்விச் சீர்திருத்தங்கள், கல்வியை ஏழைகளின் வாசற்படிக்கே கொண்டு சென்றன. இன்று கல்வி ஒரு அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் இடம்பெற்றிருப்பதற்கு, காமராஜர் போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையே முக்கியக் காரணமாகும். “சட்டங்கள் காகிதத்தில் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்“ என்ற உண்மையை தனது கல்விப் புரட்சியின் மூலம் நிரூபித்த மாமனிதர் பெருந்தலைவர் காமராஜர். அவரது கல்விப் புரட்சி, பல தலைமுறைகளுக்கு ஒளியூட்டும் அணையாத அறிவுத் தீபமாக என்றும் விளங்கும்!

வாசகர் கேட்கிறார் - வழக்கறிஞர் பதிலளிக்கிறார் (உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்கள்)

அட்வகேட் K. இளையராஜா, M.Sc., LL.B.5 நிமிடம் வாசிப்பு

கேள்வி 9: பெற்றோரைப் பராமரிக்காத மகன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? பதில்: முடியும். முதியோர் மற்றும் பெற்றோர் பராமரிப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் பராமரிப்புத் தொகை கோரலாம். கேள்வி 10: விபத்து நடந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்? பதில்: காயமடைந்தவரைப் பாதுகாப்புக்கு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேள்வி 11: கடன் கொடுத்த பணத்தை எழுத்துப்பூர்வ பத்திரம் இல்லாமல் வசூலிக்க முடியுமா? பதில்: வங்கி பரிமாற்றம், சாட்சி, செய்தி பரிமாற்றங்கள் போன்ற ஆதாரங்கள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். கேள்வி 12: பெண்ணின் அனுமதியின்றி புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவது குற்றமா? பதில்: ஆம். அது தனி உரிமையை மீறுதலாகவும், சில சமயங்களில் குற்றவியல் நடவடிக்கைக்கும் உட்பட்டதாகவும் அமையலாம். கேள்வி 13: ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் என்ன செய்ய வேண்டும்? பதில்: உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு சைபர் குற்றப் புகார் அளிக்க வேண்டும்.

திட்டமிடுங்கள்... சேமியுங்கள்... முன்னேறுங்கள்! (சொல்லி அடித்தால் நீங்களும் மில்லியனரே! செல்வம் கொழிக்கும் சிக்ரெட் தொடர்!)

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

திட்டமிடுங்கள்... சேமியுங்கள்... முன்னேறுங்கள்! இன்றைய உலகில் பணம் என்பது வெறும் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடும்பத்தின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால நம்பிக்கையின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை காட்டிலும், சம்பாதித்த பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதே வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது. பலர் கடினமாக உழைத்து வருமானம் ஈட்டினாலும், சரியான நிதித் திட்டமிடல் இல்லாத காரணத்தால் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். வருமானம் அதிகமாக இருந்தும் சேமிப்பு இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; குறைந்த வருமானத்திலேயே சிறந்த திட்டமிடலின் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நிதி அறிவு ஆகும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், வாழ்க்கையில் மிகவும் அவசியமான பண நிர்வாகம், சேமிப்பு, முதலீடு, காப்பீடு, வரி திட்டமிடல், ஓய்வூதியத் திட்டம் போன்ற நிதிசார் அறிவுகள் பெரும்பாலும் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, பலர் தவறான முதலீடுகள், கடன் சுமைகள் மற்றும் நிதி மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இந்தக் குறையைப் போக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் உயரிய எண்ணத்துடனும் “சொல்லி அடித்தால் நீங்களும் மில்லியனரே!” என்ற புதிய தொடர் “சட்டவிளக்கு” மாத இதழில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் தொடரில், வருமானத்தை எவ்வாறு திட்டமிடுவது? மாதாந்திர பட்ஜெட் தயாரிப்பது எப்படி? சேமிப்பு ஏன் அவசியம்? வங்கி வைப்பு, அசலற்ற சேமிப்பு, பரஸ்பர நிதி, பங்குச் சந்தை முதலீடுகள் பற்றிய அடிப்படை விளக்கங்கள். காப்பீட்டின் அவசியம் மற்றும் சரியான காப்பீட்டைத் தேர்வு செய்வது எப்படி? கடன்களை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது எப்படி? வருமான வரி திட்டமிடல் மற்றும் சட்டப்பூர்வமான வரிச் சலுகைகள். நிதி மோசடிகளிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள். ஓய்வூதிய காலத்திற்கான நிதித் திட்டமிடல். போன்ற பல முக்கிய அம்சங்கள் எளிய தமிழில், நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் தொடர்ந்து இடம்பெறப் போகிறது. பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைச் சரியாக நிர்வகிப்பது ஒரு கலை. அந்தக் கலையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிதி சுதந்திரம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமல்ல; சரியான திட்டமிடலுடன் செயல்படும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமான ஒன்றாகும். “இன்று செய்யும் சிறிய சேமிப்பே நாளைய பெரிய பாதுகாப்பு” என்பதை உணர்ந்து, நிதி அறிவை வளர்த்துக் கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம். இந்தப் பயணத்தில் “சட்டவிளக்கு” உங்களுடன் இணைந்து பயணிக்கிறது. பணம் • திட்டம் • முன்னேற்றம் "திட்டமிடுங்கள்... சேமியுங்கள்... முன்னேறுங்கள்!" அடுத்த இதழில் சந்திப்போம்!

அதிக சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியுமா? கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மைல்கல் தீர்ப்பு!

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

“ஜீவனாம்சம் என்பது பெண்ணுக்கான நிரந்தர உரிமையா? அல்லது பொருளாதாரத் தேவையை அடிப்படையாகக் கொண்ட சட்டப் பாதுகாப்பா?” என்ற கேள்விக்கு சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகத் தெளிவான பதிலை வழங்கியுள்ளது. நமது சமூகத்தில், திருமண தகராறு ஏற்பட்டாலோ அல்லது விவாகரத்து வழக்கு தொடுக்கப்பட்டாலோ, மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கப்படும் என்பது இயல்பான ஒன்றாகவே பலரும் கருதுகின்றனர். இதன் காரணமாக, “பெண் என்பதாலேயே ஜீவனாம்சம் கிடைக்கும்“ என்ற தவறான எண்ணமும் சமூகத்தில் வேரூன்றியுள்ளது. ஆனால் சட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவல்ல. ஜீவனாம்சம் என்பது பாலினத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கின் பின்னணி: இந்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினர். வழக்கின் விசாரணையின்போது, - மனைவி மாதம் சுமார் ரூ.1.50 லட்சம் வருமானம் பெற்றார். கணவன் மாதம் சுமார் ரூ.90,000 வருமானம் பெற்றார். இருப்பினும், மனைவி இடைக்கால ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார். குடும்ப நல நீதிமன்றம், கணவன் மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து முக்கிய சட்டக் கருத்துக்களைப் பதிவு செய்தது. 1. ‘பெண்’ என்பதே ஜீவனாம்சம் பெறும் தகுதி அல்ல தன்னைத் தானே பராமரித்துக்கொள்ளும் அளவிற்கு நல்ல வருமானம் ஈட்டும் மனைவி, தான் பெண் என்பதற்காக மட்டும் ஜீவனாம்சம் கோர முடியாது! சட்டம் பாலினத்தைப் பார்க்காது; தேவையையும், நீதியையும் மட்டுமே பார்க்கும். 2. குடும்ப நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக உத்தரவு வழங்கக் கூடாது ஜீவனாம்ச மனுக்களை விசாரிக்கும்போது, மனுதாரரின் உண்மையான வருமானம், சொத்து விவரங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, வாழ்க்கைத் தேவைகள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து மட்டுமே உத்தரவு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. “கணவன் என்றால் பணம் கொடுக்க வேண்டும்“ என்ற முன்கூட்டிய எண்ணத்துடன் நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 3. குழந்தையின் பராமரிப்பு இரு பெற்றோரின் சமமான பொறுப்பு மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று கூறிய நீதிமன்றம், குழந்தையின் நலனில் எந்தவித சமரசமும் செய்யவில்லை. குழந்தையின் கல்வி, மருத்துவம், வாழ்வா...

ஜீவனாம்சம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

திரு. குடும்ப நல நீதிமன்றம், கணவர் மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து முக்கியமான சட்டக் கருத்துக்களைப் பதிவு செய்தது. 1. ‘பெண்’ என்பதே ஜீவனாம்சம் பெறும் தகுதி அல்ல. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல வருமானம் ஈட்டும் மனைவி, தான் பெண் என்பதற்காக மட்டும் ஜீவனாம்சம் கோர முடியாது! சட்டம் பாலினத்தைப் பார்க்காது; தேவையையும், நியாயத்தையும் மட்டுமே பார்க்கும். 2. குடும்ப நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக உத்தரவு வழங்கக்கூடாது. ஜீவனாம்ச மனுக்களை விசாரிக்கும் போது, மனுதாரரின் உண்மையான வருமானம், சொத்து விவரங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, வாழ்க்கைத் தேவைகள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து மட்டுமே உத்தரவு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. “கணவன் என்றால் பணம் கொடுக்க வேண்டும்” என்ற முன்கூட்டிய எண்ணத்துடன் நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஜூலை - 2026 சட்டவிளக்கு 27 3. குழந்தையின் பராமரிப்பு இரு பெற்றோரின் சமமான பொறுப்பு. மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று கூறிய நீதிமன்றம், குழந்தையின் நலனில் எந்தவித சமரசமும் செய்யவில்லை. குழந்தையின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற செலவுகளைப் பெற்றோர் இருவரும் தங்களது வருமான விகிதத்திற்கு ஏற்ப பகிர்ந்து ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, கணவன்-மனைவிக்கிடையேயான உரிமைகள் வேறு; குழந்தையின் நலன் வேறு. சட்டம் என்ன கூறுகிறது? இந்து திருமணச் சட்டம், 1955 - பிரிவு 24 இந்த வழக்கின் மையமாக இருப்பது இந்து திருமணச் சட்டம், 1955-ன் பிரிவு 24 ஆகும். இந்தப் பிரிவின்படி, விவாகரத்து அல்லது திருமண வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலத்தில், தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளப் போதிய வருமானம் இல்லாத கணவன் அல்லது மனைவி, நீதிமன்றத்தில் இடைக்கால ஜீவனாம்சமும், வழக்குச் செலவுகளும் கோரலாம். இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சட்டம் “மனைவி மட்டும்” என்று கூறவில்லை. அது “கணவன் அல்லது மனைவி” என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், - மனைவிக்கு வருமானம் இல்லையெனில் அவர் கோரலாம். - அதேபோல் கணவருக்கு வருமானம் இல்லாமல், மனைவிக்கு நல்ல வருமானம் இருந்தாலும், கணவரும் சட்டப்படி ஜீவனாம்சம் கோர முடியும். இதுவே உண்மையான பாலின சமத்துவம். ஜீவனாம்சத்தின் உண்மையான நோக்கம்! ஜீவனாம்சம் என்பது பலர் நினைப்பது போல தண்டனை அல்ல. அதன் நோக்கம், - பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட தரப்பை பாதுகாப்பது. வழக்கு நடைபெறும் காலத்தில் அவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது. - நீதிமன்றத்தை அணுகியதற்காக யாரும் வருமையில் தள்ளப்படக் கூடாது என்பதே. அதனால், பொருளாதார ரீதியாக வலிமையான ஒருவர் தேவையில்லாமல் ஜீவனாம்சம் கோருவது, சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கு எதிரானதாகும். இந்தத் தீர்ப்பு பல முக்கியமான சமூகச் செய்திகளை நமக்கு எடுத்துரைக்கிறது. 1. சட்டம் பாலினத்தை விட நீதியை முன்னிலைப்படுத்துகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கே சட்டம் பாதுகாப்பு வழங்கும். சட்டவிளக்கு ஜூலை - 2026 28 2. பொருளாதார சுயநிர்ணயம் சட்டத்தில் முக்கியமான அளவுகோல். ஒருவர் உயர்ந்த வருமானம் பெற்றிருந்தால், தேவையில்லாமல் ஜீவனாம்சம் கோர முடியாது. 3. குடும்ப நீதிமன்றங்கள் முழுமையான ஆய்வுக்குப் பிறகே உத்தரவு வழங்க வேண்டும். வருமானம், வாழ்க்கைத் தரம், சொத்து, பொறுப்புகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 4. குழந்தையின் நலனே முதன்மை. பெற்றோர் இடையே எந்தத் தகராறும் இருந்தாலும், குழந்தையின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. “சட்டவிளக்கு” பார்வை சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகளைத் தடுப்பதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் நீதிமன்றங்களின் கடமையாகும். இந்தத் தீர்ப்பு பெண்களின் உரிமைகளை மறுப்பதல்ல. மாறாக, உண்மையில் சட்டப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கே அதன் பலன் சென்றடைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. சட்டம் யாருக்கும் சலுகை வழங்குவதற்காக உருவாக்கப்படவில்லை; நீதியை நிலைநாட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் ஒரு முக்கியமான சட்ட வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. “பெண் என்பதாலேயே ஜீவனாம்சம்” என்ற தவறான கருத்தை இது முறியடிக்கிறது. அதே நேரத்தில், வருமானமில்லாத அல்லது உண்மையில் பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பு எப்போதும் தொடரும் என்பதையும் மறுப்பதில்லை. நீதிமன்றம் கூறும் அடிப்படைச் செய்தி ஒன்றே: “சட்டத்தின் பார்வையில் பாலினம் முக்கியமல்ல; நியாயமும் தேவையுமே முக்கியம்.”

உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்கள்

அட்வகேட் R. இளையராஜா, M.Sc., LL.B.5 நிமிடம் வாசிப்பு

கேள்வி 14: விவாகரத்து வழக்கு எவ்வளவு காலம் ஆகும்?

பதில்: வழக்கின் தன்மை, ஆதாரங்கள், தரப்பினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றை பொறுத்து கால அளவு மாறுபடும்.

கேள்வி 15: வீட்டு உரிமையாளர் திடீரென வாடகைதாரரை வெளியேற்ற முடியுமா?

வாசகர் கேட்கிறார் வழக்கறிஞர் பதிலளிக்கிறார் உங்கள் சட்ட சந்தேகங்களுக்கு எளிய விளக்கங்கள் பதிலளிப்பவர்: அட்வகேட் R. இளையராஜா, M.Sc., LL.B. ஆசிரியர் - சட்டவிளக்கு

பதில்: முடியாது. சட்டப்படி அறிவிப்பும் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கேள்வி 16: FIR பதிவு செய்ய போலீசார் மறுத்தால் என்ன செய்யலாம்?

பதில்: மேல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம்.

ஜூலை - 2026 சட்டவிளக்கு 29

கேள்வி 17: குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண் எங்கு புகார் அளிக்கலாம்?

பதில்: காவல்துறை, பாதுகாப்பு அலுவலர், மகளிர் ஆணையம் அல்லது நீதிமன்றத்தை அணுகலாம்.

கேள்வி 18: பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய முடியுமா?

பதில்: ஆம். உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

கேள்வி 19: நிலம் வாங்கும் முன் என்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்?

பதில்: தாய் பத்திரிகம், பட்டா, சிட்டா, அடங்கல், EC மற்றும் உரிமை ஆவணங்களை அவசியம் சரிபார்க்க வேண்டும்.

கேள்வி 20: ஒரு நல்ல குடிமகன் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் சட்டம் எது?

பதில்: தனது அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அறிவே ஒவ்வொரு குடிமகனும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான சட்ட அறிவு ஆகும்.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை மாற்ற முடியாதா?

அட்வகேட் R. இளையராஜா, M.Sc., LL.B.5 நிமிடம் வாசிப்பு

மனுதாரரின் மகளின் பிறப்புச் சான்றிதழில் “K. Rudhrani” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், குழந்தையின் பெயரை “K. Asvitha” என்று மாற்ற முடிவு செய்து, அரசிதழ் (Gazette) வெளியீடும் செய்யப்பட்டது. இருப்பினும், Registration of Births and Deaths Act, 1969-ன் Section 15-ன் கீழ் பெயரை மாற்ற முடியாது என்று கூறி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மனுவை நிராகரித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துக்கள் இதோ: 1. Section 15-ன் கீழ் பெயர் திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது. Registration of Births and Deaths Act, 1969 - Section 15-ன் படி, பிறப்புப் பதிவேட்டில் தவறான அல்லது திருத்தப்பட வேண்டிய பதிவுகளைப் பதிவாளர் திருத்த அதிகாரம் பெற்றுள்ளார். 2. “Correction” என்பது பெயர் மாற்றத்தையும் உள்ளடக்கும். பதிவாளர்கள் கூறியபடி Section 15-ல் எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்த முடியும் என்பது தவறான விளக்கம். “Correction” (திருத்தம்) என்ற சொல்லுக்குள் பெயரை மாற்றுவதும் (Substitution of Name) அடங்கும் என்று நீதிமன்றம் தெளிவாக விளக்கியது. 3. அரசிதழ் (Gazette) வெளியீடு முக்கிய ஆதாரம். மனுதாரர் தனது மகளின் பெயர் மாற்றத்தை அரசிதழில் (Gazette Notification) முறையாக வெளியிட்டிருந்தார். இதைக் கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியது. 4. இயந்திரத்தனமான (Mechanical) நிராகரிப்பு ஏற்க முடியாது. சட்டப்பிரிவைச் சரியாகப் பரிசீலிக்காமல், மனுவை இயந்திரத்தனமாக நிராகரித்த நிர்வாக நடவடிக்கை செல்லாது என்று நீதிமன்றம் கண்டித்தது. 5. பெயர் மாற்றத்தால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தையின் பெயரை திருத்துவதால் அரசுக்கோ அல்லது வேறு யாருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, நியாயமான கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு: * பெயர் மாற்ற மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. * பிறப்புப் பதிவேட்டில் “K. Rudhrani” என்பதற்குப் பதிலாக “K. Asvitha” எனப் பெயரை திருத்தி, 30 நாட்களுக்குள் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை மாற்ற முடியாதா? வழக்கு விவரம்: * வழக்கு எண்: W.P.(MD) No.16444 of 2025 * தீர்ப்பு நாள்: 19.06.2025 * நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு * நீதிபதி: மாண்புமிகு நீதியரசர் C. சரவணன் வழக்கின் பின்னணி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிரடி தீர்ப்பு! சட்டவிளக்கு ஜூலை - 2026 30 சட்டவிளக்கு கூறும்... சட்டம் அறிந்தவன் ஏமாற மாட்டான். உரிமைகளை அறிந்தவன் அஞ்ச மாட்டான். கடமைகளை உணர்ந்தவன் தவற மாட்டான். எனவே, “அச்சம் தவிர! சட்டம் பேசு!” ஜூலை - 2026 சட்டவிளக்கு 31

கியூம்பா பென்சில்

ஆசிரியர் குழு5 நிமிடம் வாசிப்பு

ஏங்க...ஒரு வாரத்துக்குத் தேவையான தக்காளிக் தொக்கும், புளியோதரைத் தொக்கும் பண்ணி வச்சிருக்கேன்.. சாதம் மட்டும் சூடா குக்கர்ல வச்சுக்கோங்க.... தொட்டுக்க கத்திரிக்காய் புளித்தொக்கு இருக்கு.. வேணும்னா பக்கோடா வாங்கிக்கோங்க...

மாவு பிரிட்ஜில இருக்கு... நாலு இட்லியை ஊத்தித் தக்காளித்தொக்கு வச்சு சாப்பிடுங்க... என்றாள் மகேசு.

சரிம்மா.... அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..

ட்ரெயின் கிளம்பப்போகுது... பிள்ளைகளைப் பத்திரமா பார்த்து கூட்டிக்கிட்டுப் போ...

இறங்கி உன் தம்பியைப் பார்த்ததும் ஃபோன் பண்ணு... நான் கல்யாணத்துக்கு முதல் நாள் வந்திடுவேன் என்றான் செந்தில்...

பசங்களா பார்த்துப் போயிட்டு வாங்க ப்பை... என்றான்.

பை டாடி.., என்று கையாசைத்தனர் சுவாணியும், கவினும்...

ஷிப்பர் கோச் என்பதால் குறும்பத்தனம் கொஞ்சம் குறைவாக இருந்தது. சீக்கிரம் படுத்துத் தூங்கிவிட்டனர் குழந்தைகள்...

விடியற்காலை ஐந்துரை மணிக்கெல்லாம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது எக்ஸ்பிரஸ்....

இவர்கள் இறங்கும் முன்பே சபீர் தீதும்பா பென்சில் தீதும்பா பென்சில் சட்டவிளக்கு ஜூலை - 2026 32 அங்கு வந்திருந்தான். ஐ மாமா மாமா என்று குழந்தைகள் கூச்சலிட்டுக்கொண்டே சபிரிடம் ஓடினர்... சபீர் தன் மருமகப் பிள்ளைகளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தான்...

அக்காவிடம் நலம் விசாரித்தான்.

சுவாணி இப்போ எந்த கிளாஸ் படிக்கிறீங்க.. என்ற சபீரிடம், ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட் (ஐந்தாம் வகுப்பு) மாமா என்றாள்... கவின் மாமா நான் தேர்ட் ஸ்டாண்டர்ட் என்றான்.

பின்னர் லோக்கல் எலெக்ட்ரிக் ட்ரெய்னில் ஏறி அமர்ந்தனர்..

சுவாணி தன் மாமாவுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள்...

மாமாவிடம், அத்தை பேரு ஸ்ரீயாவா மாமா சூப்பரா இருக்கு... அத்தை அழகா இருப்பாங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள்.

சபீரும் சலிக்காமல் பதில் கூறிக்கொண்டே வந்தான்.

சுவாணி வகுப்பில் படித்துவிட்டு.. எல்லாரிடமும் இனிமையாகப் பழகுவாள்.

யார் என்ன கேட்டாலும் கொடுப்பாள்.

தன்னிடம் உள்ள கியூம்பா பென்சிலைத் தவிர...

அவள் பிறந்தநாளுக்கு அவள் அத்தை வாங்கிக் கொடுத்த பரிசு. அவளுக்கு மிகவும் பிடித்த பரிசு கியூம்பா பென்சில்..

சுவாணிக்கு சென்னையில் இருக்கும் அவள் அமாச்சியின் மீதும் அளவற்ற பிரியம் என்பதால் தன் மாமாவின் திருமணத்திற்காகச் சென்னை செல்கிறோம் என்று அவள் சொல்லாத ஆளே கிடையாது அவள் வகுப்பில்...

சுவாணியும் சபீரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே சமோசா சமோசா என்ற சத்தம் கேட்க மாமா எனக்கு சமோசா என்றான் கவின்... ம...சு மிரட்ட சபீர் சமாதானம் செய்து வாங்கிக் கொடுத்தான்....

ஜாலியாகப் பேசிக் கொண்டே வந்த சுவாணி திடீரென்று அமைதியானாள்..

சபீர் சுவாணி சுவாணி என்று கூப்பிட்டும் அவள் திரும்பாததால் அவள் என்ன பார்க்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான் சபீர்.

சாட்டையால் ஒரு குழந்தை தன்னை அடித்துக் கொள்ள, மற்றொறு சிறுமி ஒரு வளைளையத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டினாள். அவர்கள் அம்மா இடுப்பில் கைக்குழந்தையுடன் ஒரு தட்டை அனைவரிடமும் நீட்டினாள்.. சிலர் சில்லறைகளை தட்டில் போட்டனர்.

சுவாணி மாமா... நானும் கவினும் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கோம்...

இவங்க ரெண்டு பேரும் ஏன் ஸ்கூலுக்குப் போகலை... என்று கேட்டாள்..

அவங்க அம்மா ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க என்றான் சபீர்...

அந்தப் பெண் தட்டை சபிரிடம் நீட்டினாள்... சுவாணி அந்தக் குழந்தைகளிடம் நீங்க ஏன் ஸ்கூலுக்குப் போகலை என்றதும்...

அவள் அம்மா இரண்டு குழந்தைகளையும் ஜூலை - 2026 சட்டவிளக்கு 33 இழுத்துக்கொண்டு அடுத்த கம்பார்ட்மென்ட்க்கு ஓடிவிட்டாள்...

பாட்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள்...

செய்து வைத்த பலகாரத்தை சுவாணிக்கு ஊட்டினாள் பாட்டி...

குழந்தைகளின் கோலாகலத்துடன் கல்யாண வீடு களை கட்டியது...

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றான் சபீர்..

அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சுவாணி மட்டும் ஏதோ யோசனையில் மூழ்கிக் கிடந்தாள்...

சபீர் சுவாணியிடம் சுவாணி குட்டிக்கு என்ன யோசனை என்று கேட்டான்.

அதற்கு சுவாணி, மாமா எங்க இஃப் சோசியல்ல ஒரு லெசன் நடத்தினாங்க..

குழந்தைகள் ரைட்ஸ் (உரிமைகள்) பத்தி அதுல வந்தது மாமா என்றாள்...

அப்படியா... என்ன ரைட்ஸ் சுவாணி...

ஆறு முதல் பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளும் இலவசமாகப் படிக்கிறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்காம் மாமா...

அதுக்கு சட்டமே இருக்காம் மாமா...

அப்புறம் ஏன் மாமா ட்ரெயின்ல பார்த்தோமே அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போகலை... இப்படி படிக்கிற வயசுல வேலை செய்யக்கூடாது மாமா...

உங்க ஃபோனுக்குக் குடுங்க மாமா... ஸ்கூல் போகாத குழந்தைகளை எங்கேயாவது பார்த்தா 1098 -க்கு கால் பண்ணி சொல்லலாம்னு இஃப் சொன்னாங்க மாமா என்றாள் சுவாணி...

சபீர் சுவாணியிடம் டெய்லி மாமா அந்த ட்ரெயின்ல தான் வேலைக்கு போவேன்... நாளைக்கு அவங்க அம்மாவ பார்த்து அவங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்ல சேர்க்க சொல்லுரேன்.. நீ ஒன்றும் கவலைப்படாதடா என்று சமாதானப்படுத்தினான்..

இரவு படுக்கும் போது அம்மா கவின் பாருமா.. எப்பப் பார்த்தாலும் என் கியூம்பா பென்சில எனக்கு கேட்காமலே எடுக்குறான் என்றாள் சுவாணி... அம்மா அதட்ட ஒரு வழியாக அடுக்காக முடிந்து தூங்கிப் போனார்கள்...

மறுநாள் காலை சபீர் கவின், சுவாணி டாட்டா... மாமா ஆஃபீஸ் முடிந்து வரும் போது உங்களுக்கு பீட்சா வாங்கிக்கிட்டு வரேன் என்று கூறிக்கொண்டே பைக்கைத் உதைத்தான்

சுவாணி, மாமா மாமா என்று கூப்பிட்டுக்கொண்டே சபீரை நோக்கி ஓடினாள்...

மாமா அந்தக் குட்டிப்பையன் நாளைக்கு ஸ்கூலுக்கு போவான்ல... அவனுக்கு இந்த கியூம்பா பென்சில, என்னோட கிஃப்ட்னு சொல்லிக் கொடுத்துடுங்க மாமா என்று சபின் கையில் கொடுத்து மகிழ்ச்சியுடன் பாட்டியிடம் ஓடினாள்.

சட்டவிளக்கு ஜூலை - 2026 34 ஜூலை - 2026 சட்டவிளக்கு 35